மலேசியாவில் இந்தியப் பெண்ணின் கை, கால்களை வெட்டிய கொடூரக் கணவன் விஷம் குடித்து தூக்கில் தொங்கினார்
Posted December 15, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
கணவருக்கு சரியான வேலையும், போதிய வருமானம் இல்லாததால் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் மேனகா பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். மாதந்தோறும் சிங்கப்பூர் ஓட்டலில் சம்பளம் வாங்கியதும் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலேசியாவுக்கு வரும் மேனகா, தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளை பார்த்து விட்டு சம்பளப் பணத்தை மாமியாரிடம் தந்துவிட்டு ஓரிரு நாளில் சிங்கப்பூருக்கு சென்று விடுவது வழக்கம்.
இந்நிலையில், மாதக் கணக்கில் தனியாக சிங்கப்பூரில் தங்கியுள்ள தனது மனைவி மேனகா, அங்கிருக்கும் ஒரு சிங்கப்பூர் ஆசாமியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட கணவன், சமீப மாதங்களாக மலேசியாவுக்கு வரும்போதெல்லாம் மேனகாவுடன் சண்டை, சச்சரவை வளர்த்து வந்தார்.
‘சந்தேகக் கோடு-அது, சந்தோஷக் கேடு’ என்பது போல், அவரது இதயத்தில் குடியேறிய சந்தேகம் என்னும் பிசாசு அவரை மிருகமாக மாற்றியது. வழக்கம் போல் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு வந்த மேனகாவுடன் கடந்த 11-ம் தேதி காலை அவர் மூர்க்கத்தனமாக தகராறு செய்தார். வீட்டில் யாரும் இல்லாததால் அவரது ஆவேசம் எல்லை மீறிப் போனது.
வீட்டில் இருந்த இறைச்சி வெட்டும் பெரிய கத்தியை எடுத்த அவர், மேனகாவின் கரங்களை கையில் இருந்து வெட்டித் துண்டித்தார். இதேபோல், ஒரு காலில் இருந்து பாதத்தையும் துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த மனைவியை திரும்பிக் கூட பார்க்காமல், வெறி பிடித்தவர் போல் வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்த அவர், அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு ஓடிச்சென்று அங்குள்ள பால்கனியில் தூக்கு மாட்டிக் கொண்டு பிணமாக தொங்கி உயிரிழந்தார்.
இரு கரங்களும், ஒரு பாதமும் துண்டிக்கப்பட்ட நிலையில் மூளிக் கோலத்தில் உள்ள மேனகா, ஜோஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “மலேசியாவில் இந்தியப் பெண்ணின் கை, கால்களை வெட்டிய கொடூரக் கணவன் விஷம் குடித்து தூக்கில் தொங்கினார்”