முத்துப்பேட்டை அருகே 3 லட்சம் கையாடல் குடோன் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

Posted December 13, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை அடுத்த பாண்டியில் தாலுகா அளவில் இயங்கி வரும் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு அரசு சார்பில் ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமென்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிமென்ட் பெற குடும்பம் அட்டை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் டி.டி எடுத்து கொடுப்பது வழக்கம். அதை வங்கியில் செலுத்துவதில் ரூ.3 லட்சத்திற்கு மேல் கையாடல் நடந்ததாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டதாக இளநிலை தரை கட்டுப்பாடு அலுவலர்கள் ஜெயபால், சிவானந்தம், முருகையன் ஆகிய 3 பேரையும் நேற்று முதுநிலை மண்டல மேலாளர் அழகிரி சாமி தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.நன்றி தினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே 3 லட்சம் கையாடல் குடோன் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்”