முத்துப்பேட்டை அருகே பள்ளியை கிராம மக்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு
Posted December 17, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டைஉள்ள னர்.
பள்ளி துவங்கிய காலத் தில் இருந்து தற்போது வரை தனியார் பராமரிப் பில் உள்ளத்தால் எந்த வித அடிப் படை வசதிகளும், போதிய கட்டிடங்களும் இல்லாமல் பள்ளி உள்ளது.
இதுபற்றி அதிகாரிகளி டம் பலமுறை கோரிக்கை விடுத் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் உடனடியாக இந்த பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண் டும், உதவிபெறும் பள்ளி என்பதை அரசு பள் ளியாக மாற்ற வேண்டும் எனக்கோரி நேற்று கிராமமக்கள் அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், நாராயணசாமி, அன்பழகன், சந்திரசேகரன், வீரா சாமி ஆகியோரது தலைமை யில் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் பள் ளிக்கு பூட்டு போட முயன்றனர்.
தகவல் அறிந்து வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொ) நெப்போலியன், சப்இன்ஸ்பெக்டர் சாமிநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், வருவாய் ஆய்வாளர் முரு கேசன், கிராம நிர்வாக அலுவலர் கனிமொழி, கூடு தல் தொடக்கக்கல்வி அலு வலர் ராஜமாணிக்கம் ஆகி யோர் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று திருத்துறைப் பூண்டி தாசில்தார் மதியழ கன் தலைமையில் நடைபெ றும் அமைதி கூட்டதில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள், உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதுக்குறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜேந்தி ரன், நாராயணசாமி ஆகி யோர் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த பள் ளி யின் அடிப்படை வசதிகளுக் காக போராடி வருகிறோம். கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடமைக்காக இங்கு பள்ளி நடத்தப்படுகி றது. பராமரிப்பு செய்பவர்கள்தான் லாபம் பார்க்கிறார் கள். இனியும் இந்த அவலம் தொடர்ந்தால் விரைவில் கிராமமக்களை ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பள்ளியை கிராம மக்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு”