முத்துப்பேட்டையில்குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு பொதுமக்கள் அவதி
Posted December 22, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இந்த சாலையை மேடாக்கி சிமென்ட் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி குடியிருப்புவாசிகள் பல முறை பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் கூறுகை யில்: நான் 2000ம் ஆண்டு முதல் இந்த சாலையைச் சிமென்ட் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்து வருகிறேன். பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் கூறுகையில்: இப்பகுதி சாலை மோசமாக உள்ளதால் கழிவு நீர் மழை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “முத்துப்பேட்டையில்குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு பொதுமக்கள் அவதி”