பட்டுக்கோட்டையில்தெருவோரங்களில் மீன்கடை வைத்தால் கடும் நடவடிக்கை! நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Posted December 21, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் பொது சுகாதாரத்திற்கு இ� டயூறாக தெருவோர மீன் கடைகள் வைத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட ஆனைவிழுந்தான்குளம் அருகில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலை வர் ஜவஹர்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாரதி முன்னிலை வகித்தார். நகராட்சி
நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், நகராட்சி எல்லைப் பகுதிகளில் பொது சுகாதாரத்திற்கு இடையூறாக தெருவோர மீன் கடைகள் வைக்க அனுமதிக்கப்படாது. அவ்வாறு மீறி செயல்படுவோர் மீது பொது சுகாதாரப்பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மீன் அங்காடிகளில் மீன் கடைகள் நடத்துவோர் மீன் கழிவுகளை நகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டி பொதுமக்கள் சுகாதாரம் மேம்பாடு அடைய ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
நகராட்சி பொறியாளர் ரங்கராசு நன்றி கூறினார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில்தெருவோரங்களில் மீன்கடை வைத்தால் கடும் நடவடிக்கை! நகராட்சி ஆணையர் எச்சரிக்கை”

