மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் வைக்கும் தமிழக அரசு!

Posted December 16, 2014 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக தமிழக மக்களை அதிர்ச்சி அடையும் வகையில் மின்சார கட்டத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 2010-ம் ஆண்டு 37 சதவீதம் மின்கட்டண
உயர்வு உயர்த்தப்பட்டது. தற்பொழுது மேலும் 12 சதவீதம் உயர்த்தி உள்ளது தாங்க முடியாத ஒன்று. மின்சார உற்பத்தியும் அதன் இழப்புகளில் ஏற்படும் சீற்கேட்டையும் அதில் ஏற்படும் நஷ்டங்களையும் சரி செய்யாத அரசு. மின் கட்டணத்தை உயர்த்தி இதனை மக்கள் தலையில் வைக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கட்டண உயர்வை அரசு உடன் திறும்ப பெற வேண்டும். அதே போல் மத்திய அரசு 6 மாதம் நிறைவில் ஏழை மக்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தாமல் பெரிய முதலாளிகளுக்கு சாதகமாகதான் செயல்படுகிறது. குறிப்பாக மருத்துவ பொருட்களின் விலைகளை பல மடங்கு அதிகரித்துள்ளது. புற்று நோய் மருந்தின் ஒன்றின் விலை 8500 ரூபாயிலிருந்து 1 லட்சத்தி 8 ஆயிரமாக உயர்த்தியும், அதே போல் 108 வகை முக்கிய மருந்துகளுக்கு பல மடங்கு விலை அதிகரித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து பெரிய முதலாளிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நேதாஜீ இறப்பில் ரகசிய ஆவணம் உள்ளதாக மோடி அரசு கூறி உள்ளது. காந்தி, நேரு போன்ற தலைவர்களை போல ஒருவர் தான் நேதாஜீ. அதனை வெளிப்படையாக வெளியிட வேண்டும். நிதி பற்றாகுறை எனக்கூறி ரயில்வே துறை பல்வேறு ரயில்களை நிறுத்தி உள்ளது. அதே போல் வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதையான திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணியினை கிடப்பில் போடப்பட்ட மத்திய அரசு அதனை உடனடியாக செயல்படுத்தி பணியை துவக்க வேண்டும். அதைப்போல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம் பள்ளி வரை உள்ள ரயில்வே பணியை உடனடியாக துவக்க வேண்டும். இதனை மத்திய அரசின் ரயில்வே துறை காலத்தாமதம் படுத்தினால் மனித நேய மக்கள் கட்சி இதில் பயன்பெறும் அனைத்து பகுதி மக்களையும் ஒன்று திரட்டி தொடர் போரட்டங்களில் ஈடுப்படுவோம் இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாநில அமைப்பு செயலாளர் மௌலானா அசன,; மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முகம்மது பைசல், வழக்கறிஞர் தீன் முகம்மது, ஒன்றிய தலைவர் நைனாமுகம்மது, நகர தலைவர் சம்சுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
படம் செய்தி:
முத்தப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அருகில் மாநில அமைப்பு செயலாளர் மௌலானா அசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன் ஆகியோர் உள்ளனர்

.நன்றி படம் செய்திநிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை



0 comment(s) to... “மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் வைக்கும் தமிழக அரசு! ”