முத்துப்பேட்டை அருகே மேய்ந்தால் மகசூல் அமோகம் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்
Posted December 26, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இந்த காளை யாரையும் சீண்டுவது இல்லை. பார்க்க முரட்டுத்தனமாக இருந்தா லும் ரொம்ப சாது. தீனிக் கும் பஞ்சமில்லை. காரணம் இந்த ராஜக்காளை எங்கே சென்றாலும் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதால் அதற்கு மக்கள் ராஜமரியாதை செலுத்தி உணவு கொடுத்து மகிழ்கின்றனர். ராஜக்காளை எந்த வயலில் மேய்கிறதோ அங்கு விளைச்சல் அதிக மாக இருப்பதாகவும், கடை வாசலில் வந்து நின்றால் வியாபாரம் அமோகமாக நட ப்பதாகவும், வீட்டுக்கு வந்தால் அன்று அதிர்ஷ்டம் ஏற்படுகிறது என்றும் இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இதனால் இந்த காளை, தங்கள் வீட்டுக்கோ, கடைக்கோ, வயலுக்கோ வராதா என என ஏங்குகின்றனர். இதனால் இந்த ராஜக்காளையை தெய்வமாகவே நினைத்து வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். இதை தங்கள் பகுதிக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் கூறுகின்றனர். முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் கங்காசூடன் கூறுகையில், ஒரு காளை சராசரி 15 வருடம் தான் உயிருடன் வாழும். இந்த ராஜக்காளை உம்பளச்சேரி காளை வகையைச் சேர்ந்தது. 30 வருடங்களுக்கு மேல் இந்த காளை வாழ்வது ஆச்சர்யம் தான். உலகளவில் ஒரு நாட்டில் 39 வருடம் வாழ்ந்த ஒரு காளையின் வரலாறும் உள்ளது என்றார்

.நன்றி தமிழ்முரசு
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே மேய்ந்தால் மகசூல் அமோகம் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம்”