முத்துப்பேட்டை அடுத்த கோட்டூர் கிளார் வெளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் சாந்தி நாகராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் தங்கபாபு வரவேற்றுப் பேசினார.; இதில் பாரதியார் கவிதை போட்டி, பாரதியார் ஓவிய போட்டி மற்றும் பாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. இதில்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார். இதேபோல் சித்தமல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியிலும் பாரதியாரின் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமையாசிரியை செல்வமணி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நன்றி செய்தி படங்கள்
நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை