சைக்கிளின் விலை ரூ.2½ கோடி

Posted December 22, 2014 by Adiraivanavil in Labels:
சைக்கிளின் விலை ரூ.2½ கோடிஒரு சைக்கிளின் விலை ரூ.2½ கோடி என்றால் யாருக்கும் வியப்பு மேலிடத்தான் செய்யும். ஆனால் அது உண்மையும் கூட. ஆனால் இது சாதாரண சைக்கிள் அல்ல. மாறாக 24 காரட் சுத்த தங்கத்தால் செய்யப்பட்டது. ஆடம்பர பொருட்களை தயாரித்து விற்கும் கோல்டுஜெனி நிறுவனம்தான்
இந்த சைக்கிளையும் உருவாக்கி உள்ளது. 
இது வெறும் மாதிரி சைக்கிள் அல்ல. மனிதர்கள் பயன்படுத்தும் முழு அளவு சைக்கிள்தான். இதில் கியருடன் பந்தய வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்களும் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவில் ஒளிரும் வகையில், சைக்கிளில் சில வைரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. இந்த சைக்கிளை ஓட்டுபவருக்கு களைப்பு ஏற்படாமல் இருக்க, தோலினால் செய்யப்பட்ட பெடல்கள் இணைக்கப்பட்டு உள்ளன. 

ஆனால் இதை வாங்குவது சாதாரண விஷயமல்ல. காரணம் இதன் விலை காரின் விலையைவிட அதிகம். அதாவது 2½ லட்சம் பவுண்டு (சுமார் ரூ.2½ கோடி) ஆகும். தங்கத்துக்கு எப்போதும் மதிப்பு அதிகம்தானே. நன்றி மாலைமலர் 


0 comment(s) to... “சைக்கிளின் விலை ரூ.2½ கோடி”