பட்டுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் ( படங்கள் இணைப்பு)

Posted December 15, 2014 by Adiraivanavil in Labels:

 பட்டுக்கோட்டை  பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்கத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 12-வது ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 16 மாதங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டிய அவசியத்தை உணராமல் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், பொதுமக்களிடம் தவறான செய்திகளைக் கொண்டு செல்லும் வகையிலும் இடைக்கால நிவாரணத்தை அறிவித்துள்ளது. இந்த இடைகால நிவாரணம் என்பது அரசின் தன்னிச்சையான முடிவு. எனவே, இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.






படங்கள் காளிதாஸ் ,கமல்ராஜ்










0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மக்கள் சந்திப்பு இயக்கம் ( படங்கள் இணைப்பு)”