24 மணி நேரத்துக்குள் பிறப்பு, இறப்பு சான்று பெற புதிய சேவை மையம் பட்டுக்கோட்டையில் துவக்கம்
Posted December 22, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இதுகுறித்து நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், பொதுமக்கள் பிறப்பு திருத்தங்கள் தொடர்பாக நகராட்சி அலுவலகத்துக்கு வராமல் சான்றிதழை தாமதமின்றி பெற்று கொள்ளப்படுவதுடன் அலைச்சல் மற்றும் சிரமங்களை தவிர்க்க வேண்டியும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் இந்த இலவச பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்கும் சேவை மையம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று வழங்கக்கோரி வரும் பொதுமக்கள் இலவசமாக கணினி யில்
லீttஜீ./117.218.210.193/ஜீனீநீ தீவீக்ஷீtலீ
என்ற
இணையதள முகவரி மூலம் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். நகராட்சி பொறியாளர் ரங்கராசு நன்றி கூறினார்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “24 மணி நேரத்துக்குள் பிறப்பு, இறப்பு சான்று பெற புதிய சேவை மையம் பட்டுக்கோட்டையில் துவக்கம்”