அதிரையில்பதுக்கி வைத்திருந்த 3000 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்
Posted December 21, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கே. பாலமுருகன் (26). இவர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் சனிக்கிழமை மாலை பாலமுருகன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் 3000 போலி மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது
தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த போலி மதுபான பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான பாலமுருகனை தேடிவருகின்றனர்

0 comment(s) to... “அதிரையில்பதுக்கி வைத்திருந்த 3000 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்”