, முத்துப்பேட்டை அடுத்த உதயை நாச்சிக்குளம் மில்லெனியம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கரிகாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். முன்னதாக பள்ளியின் தாளாளர் வக்கில் அசரப் அலி வரவேற்று பேசினார். கருத்தரங்கில் பலரும் பேசினார்கள். விழிப்புணர்வு பேரணியை நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் பொன்.வேம்பையன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் அப்துல் சுகூர், பள்ளியின் முதல்வர் உதயா, துணை முதல்வர் அன்னபூரணி உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை