அகல ரயில் பாதை பணியை துவங்காவிட்டால் போராட்டம்-மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் பேட்டி
Posted December 15, 2014 by Adiraivanavil in Labels: மனிதநேய மக்கள் கட்சி
நேதாஜி இறப்பில் ரகசிய ஆவணம் உள்ளதாக மோடி அரசு கூறியுள்ளது. காந்தி, நேரு போன்ற தலைவர்களை போல ஒருவர் தான் நேதாஜி. அதை வெளிப்படையாக வெளியிட வேண்டும். நிதி பற்றாக்குறை என்று கூறி ரயில்வே துறை பல்வேறு ரயில்களை நிறுத்தியுள்ளது. திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை பணியை உடனடியாக துவங்க வேண்டும். அதேபோல் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம் பள்ளி வரை உள்ள ரயில்வே பணியை உடனடியாக துவக்க வேண்டும். இந்த பணியை செய்யாமல் ரயில்வேதுறை காலத்தாமதம் செய்தால் அனைத்து பகுதி மக்களையும் ஒன்று திரட்டி மனிதநேய மக்கள் கட்சி தொடர் போரட்டங்களில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அமைப்பு செயலாளர் மவுலானா அசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல், வழக்கறிஞர் தீன் முகம்மது, ஒன்றிய தலைவர் நைனாமுகம்மது, நகர தலைவர் சம்சுதீன் உடனிருந்தனர்.
நன்றி தினகரன்
0 comment(s) to... “அகல ரயில் பாதை பணியை துவங்காவிட்டால் போராட்டம்-மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் பேட்டி”