முத்துப்பேட்டையில் சாலையை காணவில்லை-தமுமுகவினர் விசித்திர மனு

Posted December 11, 2014 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி யில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை சாலையின் பங்களாவாசல் முதல் பேட்டை கிராமம் வரை உள்ள சிமென்ட் சாலை ரூ 39.7லட்சத்தில் அமைக்கப்பட்டது. இந்த சாலை போதிய தரம் இல்லாததால் சிமென்ட் மற்றும் ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலை போன்று காட்சி அளிக்கிறது. இது குறித்து பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாலை அமைத்த ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுத்து பழுது அடைந்த சிமென்ட் சாலையை
சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
பேரூராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. பேட்டை சிமென்ட் சாலை தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நேற்று நகர தலைவர் சம்சுதீன் தலைமை யில் செயலாளர் சீமான், பொருளாளர் தாவூதுஷா, நிர்வாகி முகமது யாசின் மற் றும் தமுமுகவினர் பேரூரா ட்சி அலுவலகம் சென்று அலுவலர் செல்வகுமாரிடம், சமீபத்தில் போடப்பட்ட பேட்டை சிமென்ட் சாலையை காணவில்லை. காணாமல் போன இந்த சிமென்ட் சாலையை உடனடியாக ஒரு வார காலத்திற்குள் கண்டுபிடித்து பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்� என்று ஒரு புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் அதே போல் முத்துப்பேட்டை காவல் நிலை யம் சென்ற த.மு.மு.கவினர் அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் வெர்ஜினியாவை சந்தித்தும் புகார் மனு கொடுத்தனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் சாலையை காணவில்லை-தமுமுகவினர் விசித்திர மனு”