அதிரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

Posted December 11, 2014 by Adiraivanavil in Labels:

பேராவூரணி அருகே உள்ள உடையநாட்டை சேர்ந்தவர் முகமது யாசின். இவரது வீட்டின் முன் கடந்த 8ம் தேதி மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டனர். மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றி சேதுபாவாசத்திரம் போலீசில் முகமது யாசின் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் கழுமங்குடா என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டையை சேர்ந்த ஆளவந்தான் (45), உடையநாட்டை சேர்ந்த மெடிசன் (25), மைதீன் (30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “அதிரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது”