பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

Posted December 11, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேரணியில் கர்நாடக சங்கீத பாடகரும், கலைமாமணி விருது பெற்றவருமான கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

நகராட்சி தலைவர் ஜவஹர்பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சமூக பல்நோக்கு சேவைமைய ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தாமரங்கோட்டை கல்யாணசுந்தரம், மாற்றுத்திறனாளிகளின் மொழி பெயர்ப்பாளர் ராணி ஆகியோர் வாழ்த்தினர். பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமை தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு பெரியதெரு வழியாக மணிக்கூண்டு பகுதியில் பேரணி முடிவடைந்தது.
தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, பஹாத்முகமது, ருத்ரைய்யா, நகர செயலாளர் நாடிமுத்து, ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் பட்டுக்கோட்டை முகமதுராவுத்தர், பேராவூரணி கோபிமுருகன், மல்லிப்பட்டினம் செயலாளர் ஜலீல்முகைதீன், அதிராம்பட்டினம் நகர தலைவர் செந்தில்குமார், மாரியம்மாள், லியாக்கத்அலி, பாலசுப்பிரமணியன் ஜோசப்ஏசுதாஸ், அதிராம்பட்டினம் காது கேளாதோர் நல சங்கம் ஷாகுல்ஹமீது மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து கோயம்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நாம் இருக்கும் பணியை சார்ந்து தான் நம் வாழ்க்கை இருக்கிறது. அதற்காக மற்றவர்களை சார்ந்திருக்கக்கூடாது. நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற தைரியத்தில் இருக்க வேண்டும். அரசாங்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும். படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி கொடுக்க வேண்டும் என்றார்
.நன்றி தினகரன்


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி ”