முஸ்லிம் பெண்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சுப்பையன் தகவல்
Posted December 09, 2014 by Adiraivanavil in Labels: தஞ்சை
இது குறித்த தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் வெளிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
தஞ்சை மாவட்ட முஸ்ஸிம் மகளிர் உதவி சங்கத்துக்கு நன்கொடை தர விருப்பம் உள்ளவர்கள் காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட கலெக்டர், தஞ்சை என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு 40 ஆயிரமும், நகர்புறத்தில் உள்ளவர்களுக்கு 60 ஆயிரமும் ஆகும். தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவிகளை பெற்று கொள்ளலாம். அத்துடன் ரூ.10 மதிப்புள்ள சுயகையொப்பமிட்ட உறுதி மொழி ஆவணம், தொடர்புடைய பள்ளிவாசல் ஜமாத்தின் பரிந்துரைக் கடிதம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இந்த மனுக்களை சங்க நிர்வாகக்குழு பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி உதவிகள் வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நன்றி மாலைமலர்
0 comment(s) to... “முஸ்லிம் பெண்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சுப்பையன் தகவல்”