அதிராம்பட்டினம் பகுதியில் மலை போல் குப்பைகள் தேக்கம்(படங்கள்இணைப்பு)
Posted December 09, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஆனால் தற்போது இந்த சாலை வழிகள் எல்லாம் தற்போது குப்பை பரவி எங்கும் அசுத்தமாக காணப்படுகிறது. அதே போல் அதிராம்பட்டினம் பகுதியில்உள்ள தெருக்களும் இதே நிலையில் குப்பைகளாக காட்சி கொடுத்து வருகிறது.
தற்போது அதிராம்பட்டித்தில் ஒரு வாரமாக குப்பைகளை எடுக்காததால் சாலைகளிலும், வீதிகளிலும், அரசு அலுவலகங்கள் முன்பும், மகளிர் உயர்நிலைப்பள்ளி முன்பும், பொதுமக்கள் கூடும் இடங்களில் மலை போல் குப்பை கள் தேங்கி கிடக்கிறது. தெரு நாய்கள் குப்பையை கிளறி சாலை பரப்புகின்றன. இதில் இருந்து வீசும் கடுமையான தூர்நாற்றத்தால் அங்குள்ளவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் பறக்கும் தூசியால் வாகன ஓட்டிகள் கண்ணில் தூசிபட்டு கீழே விழும் நிலையும் நீடித்து வருகிறது.
இந்த குப்பைகள் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், கிளை நூலகம், அலுவலகம் முன்பும், மற்றும் அரசு துவக்கப்பள்ளி , முன்பும் மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மலைபோல் தேங்கிய குப்பைகளை பேருராட்சிநிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.மேலும், சமீபத்திய மழையால் தேங்கியுள்ள நீரில் குப்பைகள் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்

0 comment(s) to... “அதிராம்பட்டினம் பகுதியில் மலை போல் குப்பைகள் தேக்கம்(படங்கள்இணைப்பு)”