அதிராம்பட்டினம் கடல் பகுதியில்அதிகளவில் பிடிபடும் திருக்கை மீன்(படங்கள்இணைப்பு)

Posted December 09, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பகுதியில் இந்த ஆண்டு சீசன் துவக்கத்தில் இருந்தே மீன் வரத்து மிக குறைவாக இருந்தது. நாள்தோறும் சீலா, வாவல், காலா, பாறை, சுறா, கெளுத்தி, கட்லா மற்றும் இறால், நண்டு வகைகள் கிடைக்கின்றன. புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஒரு வாரம் மீன்பிடிக்காத நிலையில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்று
மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதிக அளவில்  திருக்கை மீன்கள் கிடைத்தன. மேலும் சீலா, காலா, வாவல், கொடுவா, சுறா, சடையன், பன்னா, உல்லான், நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, கல் நண்டு அதிக அளவில் கிடைக்கிறது. மீன்கள் அதிகம் கிடைப்பதால் முழு வீச்சில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
 இதனால் பெரும்பாலான மீனவர்கள் திருக்கை மீன் பிடிப்பதற்காக அதிக அளவில் செல்கின்றனர். இதனால் மீன்பிடி சீசன் களைகட்டத் துவங்கியுள்ளதுதிருக்கை மீன் சீசன் இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.






0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடல் பகுதியில்அதிகளவில் பிடிபடும் திருக்கை மீன்(படங்கள்இணைப்பு)”