தீக்குளித்து மனைவி தற்கொலை கட்டிப்பிடித்த கணவனும் பலி
Posted December 09, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்பரிதாபமாக இறந்தனர். தாய், தந்தையை இழந்ததால் மகனும், மகளும் பரிதவித்து வருகின்றனர். சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (42). லாரி டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (38), மகன் பிரசாத் (11), மகள் லாவண்யா (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது சொந்த ஊர் மதுராந்தகம்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவம் சாப்பிட வேண்டும் என்பதற்காக இறைச்சி வாங்கி கொடுத்து விட்டு வெளியே சென்றார் தனசேகரன். மகாலட்சுமியும் சமைத்து வைத்து விட்டு கணவன் வருகைக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வெகு நேரமாக வரவில்லை. மாலையில்தான் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதையில் இருந்தது மகாலட்சுமிக்கு தெரிந்தது. கோபம் அடைந்த அவர், தட்டி கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த தனசேகரன், மனைவியை அடித்து உதைத்தார்.
இதனால் விரக்தி அடைந்த மகாலட்சுமி, சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீப்பெட்டியை தேடினார். கிடைக்காததால் வெளியே சென்று அருகில் இருந்த கடையில் தீப்பெட்டி கேட்டுள்ளார். அங்கிருந்தவர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, �தீப்பெட்டி இல்லை’ என கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து தீப்பெட்டியை தேடினார். அந்த நேரத்தில், �நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என கூறி வீட்டின் கதவை பூட்டி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினார் தனசேகரன். அப்போது திடீரென மகாலட்சுமி தீக்குச்சியை உரசி உடலில் தீ வைத்தார். தீ மளமளவென பரவியது. அலறி துடித்தார்.
இதை பார்த்ததும் பதற்றம் அடைந்த தனசேகரன், வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து மகாலட்சுமி மீது ஊற்றினார். தீ அணையாததால் அவரும் மகாலட்சுமியை கட்டிப்பிடித்தார். ஏற்கனவே, தனது உடலில் தனசேகரன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றியிருந்ததால் குபீரென தீ பரவியது. இருவரும் அலறி துடித்தனர். வீட்டில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்தனர். கதவை உடைத்து இருவரையும் மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதில் இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி இறந்தார். தனசேகரன், நேற்று அதிகாலையில் இறந்தார்.
இதுகுறித்து நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்ஐ கிருபாநிதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாய், தந்தையை இழந்த 2 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “தீக்குளித்து மனைவி தற்கொலை கட்டிப்பிடித்த கணவனும் பலி”