முத்துப்பேட்டைஅருகே கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்

Posted December 09, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். முகாமை ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுமதி, உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் திட்டத்தை பற்றி விளக்கினர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, சங்கேந்தி ஊராட்சி தலைவர் மனோகரன், எடையூர் ஊராட்சி தலைவர் குமரவேல் ஆகியோர் பேசினர்.

டாக்டர்கள் அரவிந்த்குமார், செந்தில்குமார், குருசங்கர், வேம்பிரித்தியா, சத்யா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். சுகாதார ஆய்வாளர் பழனியப்பன், வட்டார சுகாதார செவிலியர் அன்னப்பூரணி, பகுதி செவிலியர் அஞ்சம்மாள் மற்றும் அனைத்து பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நன்றி தினகரன் 


0 comment(s) to... “முத்துப்பேட்டைஅருகே கர்ப்பிணிகளுக்கு மருத்துவ முகாம்”