கராத்தே போட்டியில் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்

Posted December 09, 2014 by Adiraivanavil in Labels:

தஞ்சை மாவட்ட அளவலான கராத்தே போட்டி ச

மீபத்தில் நடந்தது. இதில் 9 முதல் 10 வயதினருக்கான பிரிவில் பட்டுக்கோட்டை அடுத்த பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீவேலன் முதலிடம் பிடித்தார். அதேபோல் தஞ்சையில் சமீபத்தில் மண்டல அளவில் அனைத்து பிரிவினருக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் இப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி அபிதா 8 முதல் 12 வகுப்பு பிரிவில்
முதலிடம் பிடித்தார். இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளியின் இயக்குநர்கள் எலிசபெத்தேவாசீர்வாதம், பாரத், துணை முதல்வர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் வாழ்த்து தெரிவித்தனர்.நன்றி தினகரன்


0 comment(s) to... “கராத்தே போட்டியில் லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்”