
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடலில் ஏற்படும் விபத்துக்களைத்தவிர்க்க ஒவ்வொறு நாட்டுப்படகிலும் மின்விளக்குகளைப்பொருத்தவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் மீனவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் கடலில் வலையை போட்டு விட்டு கடலிலேயே நங்கூரமிட்டு ஒய்வு எடுத்துவிட்டு பின்னர் வலையில் அகப்பட்ட மீன்களை எடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் படகுகள் எதிர் எதிரே வந்தால் படகுகள் வருவது தெரியாமல் ஒன்றுடன்
ஒன்று மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது இதனால் படகுகள் இரவு நேரங்களில் வரும் போது படகுகளில் மின்விளக்கு பொருத்தப்பட்டால் எதிரேவரும் படகுகள் தெரிந்து விபத்துக்கள் தவிர்க்கப்படும் இது பற்றி அதிராம்பட்டினம் மீனவர்கள் கூறுகையில் வெளிநாடுகளில் படகுகளில் சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது படகு ஓடும் நிலையில் பச்சைவிளக்கு நின்றால் சிகப்பு விளக்கும் எரிய வேண்டும் என அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதனால் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது எனவே அந்த முறையை நம்முடைய கடற்பகுதியிலும் பின்பற்றப்பட்டால் விபத்துக்கள் ஏற்படாமலும் பயமில்லாமலும் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாலம் என்றார்கள்