தென் இந்தியாவில் இருக்கும் மிக வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் (படங்கள் இணைப்பு)
Posted December 08, 2014 by Adiraivanavil in Labels: சுற்றுலா
நீந்தும் யானை: இயற்கையாக நீந்தவே தெரியாத விலங்கினம் யானை. ஆனால் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தமான் தீவுகளில் யானைகளை நீந்த பழக்கி உள்ளனர். அப்படி நீந்த பழகிய யானைகளுள் கடைசியாக இருப்பது ராஜன் என்னும் யானை தான். இது தான் இன்று உலகில் இருக்கும் கடைசி நீந்தும் யானையாகும். அந்தமானில் உள்ள ஹவேலோக் தீவில் இதை நாம் பார்க்க முடியும். அப்படியே கடலில் இதன் மேல் அமர்ந்து சவாரியும் போகலாம். இந்த வாய்ப்பு இன்னும் கொஞ்ச காலத்தில் யாருக்குமே கிடைக்காமல் போகலாம். முந்துங்கள். 
விசா கொடுக்கும் கடவுள்: ஆம், தெலுங்கானா மாநிலத்தில் சில்கூர் என்னும் இடத்தில் இருக்கும் பாலாஜி கோயில் தான் இத்தகைய புனைபெயருக்கு சொந்தமானது. இங்கு வந்து வேண்டிகொண்டால் எப்படியும் வெளிநாடு போக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. சிறிய கோயிலான இங்கு எந்த மதத்தை சேர்ந்தவரும் வரலாம்.
அதிசயம் என்றால் இவைதான்: ஆந்திர மாநிலம் அனத்பூர் மாவட்டத்தில் இருக்கும் லேபாக்க்ஷியில் இருக்கும் வீரபத்திரர் கோயிலில் தான் மிதக்கும் தூண்கள், கலைநயமிக்க கோயில் கற்சுவர்கள் என இங்கு நாம் பார்த்து அதிசயிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. ராமாயண காவியத்தில் ராவணன் சீதையை கவர்ந்து செல்கையில் அவரை காப்பாற்ற ஜடாயு என்னும் கழுகு ராவணனுடன் போரிட்டு இந்த இடத்தில் தான் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிசயம் என்றால் இவைதான்: இன்றுபோல தொழில் நுட்பம் இல்லை, நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் மனித உழைப்பினால் தான் அனைத்தும் சாத்தியம் போன்ற சூழலிலும் இன்றைய நவீன விஞ்ஞானத்தால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் நம்முடைய முன்னோர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். அப்படிப்பட்டதொரு அதிசய இடம்தான் லேபாக்க்ஷி கோயில்.
0 comment(s) to... “தென் இந்தியாவில் இருக்கும் மிக வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் (படங்கள் இணைப்பு) ”