சைக்கிள் மீது லாரி மோதல் நாளை பிறந்த நாள் மாணவி இன்று பலி

Posted December 08, 2014 by Adiraivanavil in Labels:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு வெள்ளந்தாங்கி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகள் நித்யா(15). மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டார். பள்ளியை நெருங்கிய நிலையில் பின்னால் வந்த லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நித்யா அந்த இடத்திலேயே இறந்தார். மயிலாடுதுறை போலீசார் விசாரிக்கின்றனர். நித்யாவின் தாய் ஆரோக்கியமேரி. அவரது சகோதரி ஆனந்தியும்(13) அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நாளை நித்யாவுக்கு பிறந்த நாள் கொண்டாடவிருந்த நிலையில் மாணவி விபத்தில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நன்றி தமிழ்முரசு 


0 comment(s) to... “சைக்கிள் மீது லாரி மோதல் நாளை பிறந்த நாள் மாணவி இன்று பலி”