அபுதாபி ஹோட்டல்களில் அதிகம் தங்குவதில் இந்தியர்கள் முதலிடம் !(படங்கள்இணைப்பு)
Posted December 11, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
அபுதாபிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யார் அங்குள்ள ஹோட்டல்களில் அதிகளவில் தங்குகிறார்கள் என்ற பட்டியலை சுற்றுலா மற்றும் கலாசார ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்தியர்களை அடுத்து, 22 சதவீத பங்களிப்புடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 11 சதவீத பங்களிப்புடன், ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்த கணக்கீட்டு காலத்தில் ஹோட்டல் வருவாய், 14 சதவீதம் அதிகரித்து 133 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த அளவில், முதல் 10 மாத காலத்தில் அபுதாபிக்கு வருகை புரிந்த வெளிநாட்டு விருந்தினர்களின் எண்ணிக்கை, 85 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.


0 comment(s) to... “அபுதாபி ஹோட்டல்களில் அதிகம் தங்குவதில் இந்தியர்கள் முதலிடம் !(படங்கள்இணைப்பு) ”