முத்துப்பேட்டையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடி ஏற்று விழா நிகழ்ச்சி நேற்று பேரூராட்சி அலுவலகம் அருகில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.டி.சிவராமன் ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட தொழில் சங்க துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், செல்லதுரை, நகரத் துணைச் செயலாளர் சுந்தர் ராஜ், ஜாம்பை கிளைச் செயலாளர் தமிழ்செல்வம் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். அதே போன்று நகரத்தில் பல்வேறு இடங்களிலும் ஒன்றியத்தில் அனைத்து கிராமத்திலும் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை