ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் இடம்பெற்ற அஸ்வின், கோலி

Posted August 18, 2015 by Adiraivanavil in Labels:
லண்டன்: ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9-வது இடத்திலும், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 10-வது இடத்திலும் உள்ளனர்.  பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 917 புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளார். தென்னாப்ரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், தென்னாப்ரிக்கா வின் ஹசிம் ஆம்லா, இலங்கையின் ஆஞ்சலோ மேத்யூஸ், குமார் சங்கக்காரா, பாகிஸ்தானின் யூனுஸ்கான், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன், ஆஸ்திரேலி யாவின் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோர் முறையே 2 முதல் 9 இடங்களைப் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், தென்னாப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் 905 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கி லாந்தின் ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட், பாகிஸ்தானின் யாசிர் ஷா, இலங்கையின் ரங்கனா ஹெராத், தென்னாப்ரிக்காவின் பிலாந்தர், ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஜான்சன், இந்தியாவின் அஸ்வின், நியூஸிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோர் முறையே 2 முதல் 10-வது இடங்களைப் பிடித்துள்ளனர்


0 comment(s) to... “ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் இடம்பெற்ற அஸ்வின், கோலி”