முத்துப்பேட்டை அடுத்த மலையாகணபதி நகரைச் சேர்ந்தவர் மாரி மகன் ராஜேந்திரன்(62). இவருக்கு சொந்தமான இடம் பாமினி ஆற்று மேல் கரையில் உள்ளது. கடந்த ஆடி மாதம் அந்த இடத்தில் புதியதாக வீடுக்கட்டி குடிவர மனைப்
போட்டார். அதன்படி வீடுக்கட்டி முடிக்கப்பட்டு மேல் புறம் கீற்று கூரை அமைத்து அனைத்து பணியும் முழுவதும் முடிந்து வருகிற ஆவணி 4-ம் தேதி குடியேற தயாரானது. இன்னும் பெயின்டிங் பணி மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் ஏற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புதிய வீட்டு பணியை முடித்துவிட்டு ராஜேந்திரன் அவரது குடும்பத்தினரும் தூங்க பழைய வீட்டிற்கு சென்றுவிட்டனர். பொழுது விடிந்து நேற்று காலை அப்பகுதியினர். பார்த்தபோது வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. உடன் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவைத்து எரிக்கப்பட்ட வீட்டை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து ராஜேந்திரன் கூறுகையில்: நேற்று வரை அனைத்து பணியும் முடிந்து பழைய வீட்டுக்கு திரும்பினோம். காலையில் பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வேண்டுமென்றே பின் பகுதி வழியாக வந்து எனது வீட்டை தீ வைத்து எரித்துவிட்டனர். இதற்கு காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் சமீபக்காலமாக இப்பகுதியில் இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்டு வரும் அறிவாள் வெட்டு மற்றும் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இங்கு பரபரப்பும், பதற்றமும் நடந்து வரும் சூழ்நிலையில் இந்த வீடு எரிப்பு சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை