பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்
Posted August 18, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
மாணவர்கள் கொண்டுவராத பாட புத்தகங்கள் தேவைப்படும் போது அவற்றை உடனடியாக பெற உதவும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும். பாடப் படிப்பை தவிர பிற திறன் மேம்பாட்டுக்கான நேரத்தை தினசரி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் எடை குறைந்த மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான புத்தக பைகளை மட்டுமே பெற்றோர்கள் வாங்கித் தர வேண்டும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
நாளை டெல்லியில் நடைபெற உள்ள கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் இந்த விதிமுறைகள் விவாதத்திற்கு வைக்கப்பட உள்ளன. அப்போது முன்வைக்கப்டும் கருத்துகளையும் சேர்த்து புதிய விதிகள் வெளியிடப்படும் என மத்திய மனித வள மேம்மபாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளன.
0 comment(s) to... “பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க மத்திய அரசு புதிய திட்டம்”