தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரசார்: பரபரப்பு

Posted August 15, 2015 by Adiraivanavil in Labels:
தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரசார்: சேலத்தில் பரபரப்புசேலம், ஆக. 15–
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் புதிய மாநகர் மாவட்ட தலைவர் மேகநாதன் தேசிய கொடியை ஏற்றினார். இந்த விழாவில் புதிய மாவட்ட தலைவர்கள் பெரியசாமி (சேலம் கிழக்கு), முருகன் (சேலம் மேற்கு) உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மேகநாதன் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நிர்வாகிகள் கூறியவுடன் அவர் திரும்ப கொடி ஏற்றினார்.
இதுபற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது கொடியை தலைகீழாக ஏற்றவில்லை என்று கூறினர். தேசிய கொடி ஏற்றிய போது பழைய கயிறு என்பதால் அறுந்து கொடி தலை கீழாக தொங்கியதாகவும், இதை உடனடியாக நிர்வாகிகள் பார்த்து கூறியதால் அதை சரி செய்து தேசிய கொடியை சரியாக பறக்க விட்டதாகவும் கூறினர். news by malaimalar


0 comment(s) to... “தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய காங்கிரசார்: பரபரப்பு”