டிரைவர் எரித்துக்கொலை: மகளை கொடுமைப்படுத்தியதால் மாமியார் வெறிச்செயல்
Posted August 19, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இவர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மாமியார் முல்லையம்மாள் கண்டித்து வந்துள்ளார். நேற்றும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார்.
தனது மகளை கொடுமைப்படுத்துவதை கண்டு மனமுடைந்திருந்த முல்லையம்மாள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த தனது மருமகன் செந்தில் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்து அலறிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
news by malaimalar
0 comment(s) to... “டிரைவர் எரித்துக்கொலை: மகளை கொடுமைப்படுத்தியதால் மாமியார் வெறிச்செயல்”