அட்டைப் பெட்டியில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.
Posted August 18, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்திசவுதி அரேபியா நாட்டிலுள்ள மக்கா நகரில் பிறந்து சில மணி நேரமேயான ஒரு குழந்தை சாலையோரமாக கிடந்த அட்டைப் பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மக்கா நகரின் பிரதான சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஓரிடத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு சுற்றும்முற்றும் பார்த்தனர்.
சாலையோரமாக கிடந்த ஒரு அட்டைப் பெட்டிக்குள்ளே இருந்து குரல் வருவதை அறிந்து, அந்தப் பெட்டியை திறந்துப் பார்த்தபோது பிறந்து சில மணி நேரமான அந்த குழந்தை ஒரு துணியால் சுற்றப்பட்டு கிடப்பதை கண்டனர்.
தொப்புள் கொடிகூட துண்டிக்கப்படாமல் கிடந்த அந்த குழந்தையை செம்பிறை அமைப்பின் உதவியுடன் மக்கா நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரில் அனுமதித்து, அதன் பெற்றோரை கண்டுபிடிக்க தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
0 comment(s) to... “ அட்டைப் பெட்டியில் அனாதையாக கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.”