அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசூரம் வழங்கல்!
Posted August 17, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி மற்றும் ஆலங்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசூரம் பொதுமக்களிடம் வழங்கும்
நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.கே.பி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடைதெரு மற்றும் வீதி வீதி சென்று பொதுமக்களிடம் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் அய்யப்பன், ஒன்றிய அவைத்தலைவர் இரணியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கந்தவேல், பாரதிதாசன், ஊராட்சி செயலாளர்கள் சுப்பிரமணியன், பக்கிரிசாமி, தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், நிர்வாகி பிரவின்குமார் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை 0 comment(s) to... “அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசூரம் வழங்கல்!”