தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மது ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது

Posted August 29, 2015 by Adiraivanavil in Labels:
பேராவூரணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
     பேராவூரணி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆதனூர் தேரடி திடல் ஆகிய இடங்களில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பெ.ஜான் பாண்டியன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்து மதுவிலக்கின் அவசியம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் குருமூர்த்தி, மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
        பேராவூரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.மரிய சவரிநாதன், நகரச்செயலாளர் எஃப்.ஆசிர்வாதம், நகர இளைஞர் அணி தலைவர் வி.எம்.ஜே.யோசுவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

           பெ.ஜான் பாண்டியன் வருகையையொட்டி நகரில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


0 comment(s) to... “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மது ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் கொடியேற்று விழா ஜான் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது ”