முத்துப்பேட்டையில் சாதனை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது!

Posted August 20, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை பகுதியில் சாதனை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கி பாராட்டினார். 

இதில் முத்துப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பாக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு பணியினை மாவட்ட அளவில் சிறப்பாக செயல் படுத்தியதற்காக திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற டாக்டர் புஷ்பாவை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு அவரின் சிறப்பான சேவையை பாராட்டி திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை காவலர்கள் பொதுமக்கள் பாராட்டினர். 
அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் பிரகாஷ்க்கு காணமல் போனா குழந்தையை 1-மணி நேரத்தில் மீட்டதற்காக திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார். காவலர் பிரகாசை காவலர்கள் பொதுமக்கள் பாராட்டினர். 
படம்செய்தி 
1. முத்துப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பாக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு பணியினை மாவட்ட அளவில் சிறப்பாக செயல் படுத்தியதற்காக திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார்.

நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

2. டாக்டர் புஷ்பா 

3.இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்.




4.காவலர் பிரகாஷ்





0 comment(s) to... “முத்துப்பேட்டையில் சாதனை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது!”