பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் அரசாணையை எரிக்கும் போராட்டம்

Posted August 26, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை பெறுவதற்கு அனாதையாக இருக்க வேண்டுமென்ற தமிழக அரசின் சமூக நலத்துறை அரசாணை எண் 26–ஐ எரிக்கும் போராட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாவட்ட பொருளாளர் ஜமால் முகமது, ஷேக் அப்துல்லா, செந்தில்குமார், லாரன்ஸ் சேவியர் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2015 ம் ஆண்டு 24, 25 தேதிகளில் சென்னையில் மூன்றாயிரம் பேர் கலந்துகொண்ட காத்திருப்பு போராட்டத்தின் போது நடந்த பேச்சு வார்த்தையில் தற்போது உள்ள விதிமுறைகள் சரிஇல்லை, மாற்றம் வேண்டும் என்று கூறியதை அடுத்து தமிழ அரசின் சமூகநலத்துறை அமைச்சர் உத்ரவின் பெயரில் கடந்த 2015 ஏப்ரல் 17–ந்தேதி விதிமுறைகள் மாற்றியதாக கூறி அரசாணை எண் 26–ஐ வெளியிட்டுள்ளது.
அதில் உதவித்தொகை பெற முதல் விதியாக அனாதையாக இருக்க வேண்டும் என்று உள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படாத வகையில் வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திராகாந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகைக்கும் அனாதையாக இருக்க வேண்டும் என உள்ளது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இது பயன்பெற முடியாமல் செய்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். முடிவில் அந்த அரசாணையை எரிக்க முற்பட்டபோது டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் தடுத்து அனைவரையும் கலைந்து போக செய்தார்.



0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் அரசாணையை எரிக்கும் போராட்டம் ”