பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை சாவு

Posted August 28, 2015 by Adiraivanavil in Labels:
பல்லாவரம் அருகே பிரியாணி சாப்பிட்டபோது தொண்டையில் சாதம் சிக்கியதால் மூச்சுதிணறி 1லு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

பிரியாணி சாப்பிட்ட குழந்தை

பல்லாவரம் அருகே உள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ரகுமத்நிசா. இவருக்கும், வினோத்குமார் என்பவருக் கும் திருமணமாகி 7ஆண்டுகள் ஆகிறது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரகுமத்நிசா, அதே பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். 

ரகுமத்நிசாவின் 1லு வயது பெண் குழந்தை சந்தியா. நேற்றுமுன்தினம் இரவு பசியில் இருந்த குழந்தைக்கு பிரியாணி கொடுத்தனர். குழந்தையும் விரும்பி உண்டது.

மூச்சு திணறி சாவு

சிறிதுநேரம் கழித்து பிரியாணி சாதம் குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனே மூச்சுதிணறி குழந்தை மயங்கி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரகுமத்நிசா, குழந்தையை தூக்கிக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் சோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் ரகுமத்நிசாவிடம் விசாரித்தனர். 

பிரியாணி கொடுத்தபோது மூச்சுதிணறி மயங்கி விழுந்ததாக அவர் டாக்டர்களிடம் தெரிவித்தார். 1லு வயது குழந்தைக்கு பிரியாணி கொடுத்தது ஏன்? என்று டாக்டர்கள் அவரை கண்டித்தனர். இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தை, பிரியாணி தின்றதால் இறந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


0 comment(s) to... “பிரியாணி சாப்பிட்ட 1 வயது குழந்தை சாவு”