22 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது
Posted August 26, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
கடந்த சில மாதங்களாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் பகுதிகளில் வீடுகள், ஆஸ்பத்திரி, கடைகள் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போய்க் கொண்டிருந்தன. இதுபற்றி பட்டுக்கோட்டை நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டுக்கோட்டை கரிக்காடு பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு ஆசாமி போலீசாரை கண்டதும் ஓட ஆரம்பித்தார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் மேல்மருதூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மகன் ராஜ்குமார் (வயது 39) என்றும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர் பகுதிகளில் 22 மோட்டார் சைக்கிள்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 22 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ராஜ்குமாரை பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
0 comment(s) to... “ 22 மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது”