பெண் லாரி டிரைவருக்கு கல்பனா சாவ்லா விருது : சுதந்திர தினத்தில் வழங்கி முதல்வர் பாராட்டு
Posted August 16, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்சென்னை - சாகசத்திற்கும் சாதனைக்குமான கல்பனா சாவ்லா விருது எனக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று ஈரோட்டை சேர்ந்த பெண் லாரி டிரைவர் ஜோதிமணி கூறியுள்ளார். சென்னை கோட்டை வளாகத்தில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு விருதுகளை வழங்கினார். ஈரோட்டை சேர்ந்த ஜோதிமணி என்ற பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.இது குறித்து ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவத , கடந்த மூன்று ஆண்டுகளாக நான் லாரி ஓட்டுநராக இருக்கிறேன். எனது தந்தை ஆறுமுகமும் என் கணவர் கெளதமனும் லாரி ஓட்டுநர்களாக பணியாற்றி இருக்கின்றனர். . தேசிய அளவில் உரிமம் பெற்றிருப்பதால், ஒரு மாதத்துக்கு 12 ஆயிரம் கிலோமீட்டர் வரை லாரியை ஓட்டுவேன்.எனது இந்தச் செயலை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது. எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் மாதத்திற்கு 12 ஆயிரம் கிலோ மீட்டர் வரை லாரி ஓட்டுவேன். அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. பெண்களால் எதுவும் முடியும். என்னை ஊக்கப்படுத்த இந்த விருது உதவும் என்று ஜோதிமணி.தெரிவித்தார்.
0 comment(s) to... “பெண் லாரி டிரைவருக்கு கல்பனா சாவ்லா விருது : சுதந்திர தினத்தில் வழங்கி முதல்வர் பாராட்டு”