ராஜிவ் காந்தி பிறந்ததினம் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

Posted August 22, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகரத் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாநில சிறுபாண்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் உணவு பொருட்கள் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர்கள் வேல் முருகன், முத்தலிபு, குலாம் ரசூல், குமார், செயலாளார் நாசர், பொருளாளர் சந்திரமோகன், உதவித் தலைமை ஆசிரியர் ஆண்டனி, ஆசிரியர் செல்வசிதம்பரம், அங்கன்வாடி பணியாளர் புனிதா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “ ராஜிவ் காந்தி பிறந்ததினம் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்.”