காவல்துறை ரோந்து பணிக்கு 135 ஜிப்சி வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்

Posted August 22, 2015 by Adiraivanavil in Labels:

சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று சென்னை பெருநகரகாவல்துறையினரின் ரோந்து பணிக்கு ரூ 8 கோடியே 55 லட்சம் செலவில்வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது,குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனைபெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை காவல் துறை ஆற்றிவருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினர் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில், புதிய காவல் நிலையங்கள் மற்றும்குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்புவசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களைவழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும்பொலிரோ ரோந்து வாகனங்களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதாஏற்கனவே வழங்கியுள்ளார்.. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை பெருநகர காவல் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளகுறுகிய சக்கர அமைப்பு கொண்ட 135 வாகனங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ச ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு ரூ 8 கோடியே 55 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துதுவக்கி வைத்தார். இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள்பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்த 135 மாருதி ஜிப்சி ரோந்துவாகனங்களுடன் சேர்த்து சென்னை பெருநகர காவல்துறையில் தற்போது 360 நான்குசக்கர ரோந்து வாகனங்களும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில்
உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் . ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்,, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா,, தமிழ்நாடு காவல்துறை தலைமைஇயக்குநர் திரு. அசோக் குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர். எஸ். ஜார்ஜ், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 comment(s) to... “ காவல்துறை ரோந்து பணிக்கு 135 ஜிப்சி வாகனங்கள்: முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்”