அதிரையில் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
Posted August 19, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த 3 நாட்களாக
தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழை விடுவதும், பின்னர் வலுத்து
பெய்வதுமாக தொடர்ந்து
கொண்டே இருந்தது. முந்தைய நாள்
தொடங்கிய மழை அதிகாலை வரை தொடர்ந்தது. நேற்று காலையில் மழை பெய்யவில்லை.
சிறிது நேரம் வெயில் அடித்தது.
ஆனால் மாலை5மணிக்கு
திடீரென்று மீண்டும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. தூறலாக தொடங்கிய மழை பெரு
மழையாக உருவெடுத்து பெய்தது.இதனையடுத்து முத்தாம்மாள் தெருவில் இது தாழ்வான பகுதியாகும் இப்பகுதில்மழை நீர் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் 25 வீடுகளில்
மழை வெள்ளம் சூழ்ந்தது.மழை நீர் வடிகால் சரியில்லதாதல் அப்பகுதி மக்கள் சரி செய்யும் பணியில் விடிய விடிய ஈடுப்பட்டுவுள்ளனர்
படங்கள் சரன்

0 comment(s) to... “அதிரையில் பகுதியில் விடிய, விடிய பலத்த மழை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது”