முத்துப்பேட்டையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தும், அவரது வீடு மீதும் சத்தியமூர்த்திபவன் மீதும் தாக்குதல் நடத்திய அ.தி.மு.கவினரை
கண்டித்தும், இந்த வெறி செயலை செய்ய தூண்டிய ஜெயலலிதாவை கண்டித்தும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் தலைமை வகித்தார். வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் ஜெகபர் அலி, மாவட்ட விவசாயப்பிரிவு தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான கோஷங்களை காங்கிரசார் எழுப்பினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முகைதீன் பிச்சை, மாவட்ட அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, மாநில சிறுபாண்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முகம்மது மைதீன், சுந்தரராமன், எக்கல் இளவரசன், குன்னலூர் வடுகநாதன், மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர் ராஜ்மோகன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், நகர செயலாளர் நாசர், நகரத்துணைத் தலைவர்கள் வேல் முருகன், குலாம் ரசூல், முத்தலிப், குமார், பொருளாளர் சந்திரமோகன், வட்டார துணைத் தலைவர் தங்கராஜன், வட்டார துணைச் செயலாளர் ஆனந்த் ரெட்டி, வட்டார பொருளாளர் சிவானந்த சாமி, மாவட்ட சிறுபாண்மை பிரிவு தஸ்தகீர் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை