முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக்பள்ளியில் நடந்த தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதஅய்யர் இலக்கிய மன்றத்தின் 12 வது ஆண்டுநிறைவு விழா
Posted August 20, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
தமிழ்இலக்கியத்தில் காலத்தால் அழியாத வகையில் தமிழ் இலக்கியத்தை மீட்டெடுத்து தமிழ்மொழிக்கு உலக அளவில் புகழை ஏற்படுத்தியதுடன், செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணமாக இருந்தவர் உ.வே.சா என எழுத்தாளர் ஞானி புகழாரம் சூட்டினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக்பள்ளியில் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதஅய்யர் இலக்கிய மன்றத்தின் 12 வது ஆண்டுநிறைவு விழா நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஆர்.சகுந்தலா தலைமை வகித்தார், பள்ளி தாளாளர் எம்.ஏ.முஸ்தபா முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ஞானி கலந்துக் கொண்டு முன்னதாக உ.வே.சா இலக்கிய போட்டியில் கலந்துகொண்டு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது: உலகில் கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்தோன்றியது தமிழ்மொழி. தமிழ் மொழி மத, சமயங்களை உள்ளடக்கியதாகவும், மருத்துவம், கலை,அறிவியல், என அனைத்தையும் உள்வாங்கியதாக அமைந்துள்ள வரலாறு கொண்ட மொழியாகும். இன்றைய நவீன விஞ்ஞானத்தில் உள்ள ஏவுகணைகள் குறித்து ஆரியபட்டர் அன்றே குறிப்பிட்டிருந்தார். அனைத்து சமயங்களையும் வாழவைத்து தமிழ் மொழி காலத்தால் அழியாமல் வாழ்ந்து வந்தார். அத்தகைய தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் காலத்தால் அழிந்து போன நிலையில் அதை மீட்டெடுத்து தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணமாக இருந்தவர் உ.வே.சா. அவர் எந்த வாகன வசதியும் இல்லா தகாலத்தில் கால்நடையாகவே அலைந்து திரிந்து சீவகசிந்தாமணி, குண்டலகேசி உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்கலை மீட்டெடுத்தவர். ஆசிரியர் மாணவர் உறவுக்கு இலக்கணாக திகழ்ந்தவர்கள் மாகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் ,அவரது மாணவரான உ.வே.சாவும் இருந்ததை யாரும் மறக்கமுடியாது, சைவரான உ.வே.சா ஜைன சமயத்தைச் சேர்ந்த சீவகசிந்தாமணியையும் அழியாமல் அதன கருத்து மாறாமல் புதுப்பித்;து வந்தார். தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு தேவை மதநல்லிணக்கம். இந்தியாவில் நிலவிய மதநல்லிணக்கம் தற்போது குறைந்துவருகிறது. அதை மீண்டும் தழைக்க செய்ய மாணவசமுதாயம் நாற்றங்காலாக திகழ்வதுடன், மதநல்லிணக்க தூதுவர்களாகவும் திகழவேண்டும், மேலும் அன்றைய காலகட்டத்தில் பெண்கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழ்நிலையில் முத்துலெட்சுமி ரெட்டி சமுதாயத்தின் ஏளனங்களையெல்லாம் புறன்தள்ளி முதல் மருத்துவரானார். இன்று லட்சக்கணக்கான முத்துலெட்சுமிகள் உருவாகி ஆணுக்கு, பெண் சரிநிகர் சமமாக அனைத்து துறைகளிலும், கோளோச்சிவருவது மிகப்பெரிய சமுதாயமாற்றம், ரத்தம் சிந்தாத அறவழி ஆயுதம் கல்வி அதனை மறக்காமல் மாணவசமுதாயம், தானும் உயர்ந்து சமுதாயத்தையும் உயர்வடைய செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும். ரகமத் பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள மரங்கள் இயற்கை சூழலை உருவாக்கி உள்ளது, தமிழ்மொழியின் உயர்வுக்கும், புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மரம் நடுவதில் ஒரு அமைதிப்புரட்டசியை ஏற்படுத்தி உள்ளது அதற்கு காரணமான, பள்ளி தாளாளர் எம்.ஏ.முஸ்தபாவைப் பாராட்டுகிறேன் என்று இவ்வாறு ஞானி பேசினார.;
நிகழ்ச்சியை தமிழாசிரியை செல்வமேரி தொகுத்து வழங்கி பேசினார் இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
படம்செய்தி நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிக்பள்ளியில் நடந்த தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதஅய்யர் இலக்கிய மன்றத்தின் 12 வது ஆண்டுநிறைவு விழா”