அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் - ஜெயலலிதா அறிவிப்பு

Posted August 30, 2015 by Adiraivanavil in Labels:
சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர்– பாலு (காவேரி லைன், நியூகாலனி, தருமபுரி), துணைத் தலைவர்கள்– ஷர்மிளா வினோத்குமார் (சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம்), அன்பு செழியன் (விருகம்பாக்கம்), இணைச்செயலாளர்கள்– பிரசன்ன அழகர்சாமி (போரூர்), ராஜ்மோகன் (ஸ்ரீவில்லிபுத்தூர்), கார்த்திகேயன் (அம்பத்தூர்), ராமச்சந்திரன் (கோவை), துணைச் செயலாளர்கள்– திருமலவாசன் (கே.கே.நகர் சென்னை), பிரசாத் (திருவல்லிக்கேணி), சண்முகவேல் (சங்கரன்கோவில்), பாலமுருகன் (புரசைவாக்கம்), கார்த்திக் (விருகம்பாக்கம்), பொருளாளர்– தர்மேஷ் குமார் (திருத்தணி) கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார், .


0 comment(s) to... “அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் - ஜெயலலிதா அறிவிப்பு”