போதை பொருள் கடத்தி வந்த புறா கைது

Posted August 14, 2015 by Adiraivanavil in Labels:
கோஸ்டா ரிகாவின் சன் ஜோசே லா ரிபார்மாபெனிடெண்டியா வில் உள்ள சிறைச்சாலைக்கு மேலே பறந்த போது  போலீசார் ஒரு  புறாவை போதை பொருளுடன் கைது செய்தனர். புறாவுடன் 14 கிராம் கொக்கையன் மற்றும் 14 கிராம் கஞ்சா ஆகியவை ஒரு சிறிய பேக்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. 


இந்த புறாக்கள் நன்கு பழக்கப்பட்டு இது போல் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்படுவதாக  சிறைத்துறை இயக்குனர் பவுல் பெர்டோஸி தெரிவித்தார். புறாவை 40 நாட்கள் பூட்டிவைக்க உத்தரவிடபட்டு உள்ளது.இந்த புறாவை யார் அனுப்பியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


0 comment(s) to... “ போதை பொருள் கடத்தி வந்த புறா கைது”