அதிரையில் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிரை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ப்பு
Posted December 06, 2016 by Adiraivanavil in Labels: ADIRAI PRESS CLUB
அதிராம்பட்டினத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காலை முதல் அதிமுகவினர் மற்ற கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாலை 3 மணியளவில் அதிராம்பட்டினம் பொதுமக்கள் அனைவரும் கண்ணீருடன் ஊர்வலம் நடத்தினர். இதனையடுத்து அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனை வழியாக சேர்மன்வாடி பேரூந்து நிலையத்தை வந்து அடைந்தது. ஜெயலலிதாவின் மவுன ஊர்வலத்தை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் பல கட்சியினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதிரை பத்திரிகையாளர் நிர்வாகிகளும் கலந்து கொண்டு இரங்களை தெரிவித்து கொண்டனர். 
0 comment(s) to... “அதிரையில் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் அதிரை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ப்பு ”


