skip to main |
skip to sidebar
Posted August 24, 2015
by
Adiraivanavil
in
Labels:
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அருகே உள்ள வீரன்வயல் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). விவசாயி. அதேபகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன்(34). இவர்கள் இருவரும் உறவினர்கள். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மெய்யப்பன், வீரப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலைமிரட்டல் விடுத்தும், அவரை தாக்கினார். இதுகுறித்து வீரப்பன் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மெய்யப்பனை கைது செய்தனர்.